முகப்பு
தமிழ்நாடு

இயல்பை விட வெயில் அதிகரிக்கும்: மிதமான மழையும் பெய்யும்!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய மோக்கா புயலானது நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது. 

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகிள்ல மேலும் வலுப்பெற்றும் மே 14 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றம் வடக்கு மியான்மர் கடற்கரையை 15 முதல் 160 கி.மீ வேகத்திலும் இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் கடக்கக்கூடும். 

இதன் காரணமாக மே 12(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மே 13 முதல் 16 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை...

மே 12 முதல் மே 16 வரை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமான இருக்கக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →