தமிழ்நாடு

ஆசிரியர்கள் போராட்டம்: திருமாவளவன் நேரில் ஆதரவு

DIN

சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

சிறப்பு ஆணை பிறப்பித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு பணி தர வேண்டும். பேரவை கூட்டத்தொடர் வரை கோரிக்கை நிறைவேற்றப் படவில்லையெனில் பேரவையில் கவனப்படுத்துவோம் என்றார்.

ஏற்கெனவே ஆசிரியர்களின் போராட்டத்துக்கு அமமுக ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது திருமாவளவனும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT