தமிழ்நாடு

கல்லூரி மாணவனை அறைந்த காவல் ஆய்வாளர்!

வேலூரில் கல்லூரி மாணவனை காவல் ஆய்வாளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

வேலூரில் கல்லூரி மாணவனை காவல் ஆய்வாளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் ஆவணங்களை சரிபார்த்து ஆவணங்கள் இல்லாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதித்து அனுப்புவது வழக்கம்..

அதனடிப்படையில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் தினேஷை நிறுத்தி ஆவணங்களை காட்டச் சொன்னார்.

ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும் ஹெல்மெட்டுடன் வந்த மாணவன் தினேஷுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவருக்கு ரசீதை கிழித்துக் கொடுத்துள்ளார்.

அதை வாங்க மறுத்த கல்லூரி மாணவன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் ஆய்வாளர் எங்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதென ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது ஆய்வாளர் மோதிரம் அணிந்த கையில் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அது மாணவனின் கன்னத்தில் பட்டு உதடு கிழிந்துள்ளது. இதனால் தினேஷுக்கு ரத்தம் வழியத் தொடங்கியது.

உடனே தினேஷ் அவரது தந்தையாருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி அழுதுள்ளார். அவருடன் சேர்ந்து அப்பகுதி மக்களும் சேர்ந்து கொள்ளவே திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் திரளவே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அங்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடி வாங்கிய மாணவனிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT