நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 14) திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும்
தமிழ்நாடுநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 14) திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும்
சென்னை: நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 14) திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து விவாதிப்பதற்காக வரும் 20 ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை(மே 14) காலை 11 மணிக்கு நடைபெறும்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.