முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,253 கன அடியிலிருந்து 4,489 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.53 அடியிலிருந்து 103.70அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →