கோப்புப்படம் 
தமிழ்நாடு

10, 11 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு

10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

DIN

10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின.

இந்நிலையில், 10 மற்றும் 11-ஆம் வகுப்புக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை(மே 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும், 12-ஆம் வகுப்பு முடிவுகள் பகல் 2 மணிக்கும் வெளியாகின்றன.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT