தமிழ்நாடு

கண்களைக் கட்டியபடி சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்த சிறுமி

கோவையில் கண்களைக்  கட்டியபடி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சிறுமி உலக சாதனை படைத்துள்ளார். 

DIN

கோவையில் கண்களைக்  கட்டியபடி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சிறுமி உலக சாதனை படைத்துள்ளார். 

சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி உலக சாதனையை நிகழ்த்தி  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்ராஜ், இசைவாணி தம்பதியரின் ஆறு வயது மகள் அகல்யா. இவர் சிறு வயதிலிருந்து சிலம்பம் கலையில் ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1நிமிடத்தில் 146முறை சிலம்பத்தை சுழற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கண்களைக்  கட்டியபடி சாதனை நிகழ்த்திய சிறுமி துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே 1 நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியதை சிறுமி அகல்யா முறியடித்துள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: நீடூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

சாதனைப் பெண் குழந்தைகளுக்கு விருது

ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

SCROLL FOR NEXT