தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரம் ஏறும் முதல் தமிழ்ப்பெண்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

DIN

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. 

அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT