படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ் 
தமிழ்நாடு

ஐபிஎல் 2023: பிளே ஆஃப் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை!

சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே  விற்பனை செய்யவுள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே  விற்பனை செய்யவுள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் மே 23, 24 ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிக்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகா்கள் அதிகளவில் திரண்டு தள்ளுமுள்ளு ஏற்படுவதும், காவல் துறையினர் தடிஅடி நடத்தவதும் வழக்கமாக இருந்தது.

மேலும், ஐபிஎல் போட்டி டிக்கெட்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என  சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பேடிஎம் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT