முகப்பு
தமிழ்நாடு

நாகூர் அருகே பைபர் படகுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

நாகூர் அருகே வெட்டாற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 17 மே, 2023 at 11:15 AM
பகிர்:

நாகூர் அருகே வெட்டாற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர் அருகே மேல பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள அமிர்தா நகர் சுனாமி நிரந்தர குடியிருப்பைச் சேர்ந்த குப்புரத்தினம் மகன் செல்வமணி. மீனவரான இவர், அவருக்கு சொந்தமான பைபர் படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாகூர் வெட்டாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்வமணியின் பைபர் மற்றும் மீன்பிடி வலை புதன்கிழமை (மே 17) அதிகாலை திடீரென தீ பிடித்து எரிந்த சேதமடைந்துள்ளது.

Advertisement

இன்று வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக பைபர் படகை எடுக்கச் சென்றபோது. படகு எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வமணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார், படகு எரிந்தது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சேதமடைந்த படகின் மதிப்பு ரூ.4.50 லட்சம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், செல்வமணியின் படகுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாக தீ வைக்கப்படதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.