தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 17 ஆம் தேதி  நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதல்வரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார். 

சத்துணவு,குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றம் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 இலட்சம் மாணவ மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT