தமிழ்நாடு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆளுநரிடம் மனு: அண்ணாமலை

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வருகிற மே 21 ஆம் தேதி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வருகிற மே 21 ஆம் தேதி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் இதனை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் நாளை(சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இதையடுத்து,  பாஜக சார்பில் வருகிற 21 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT