தமிழ்நாடு

நோக்கியா 105, நோக்கியா 106 4ஜி மாடல் கைப்பேசிகள் அறிமுகம்

DIN


கைப்பேசி தயாரிப்பில் மிகப் பழமையான நிறுவனமான நோக்கியா, தற்போது நோக்கியா 105, நோக்கியா 106 என்ற 4ஜி வசதியுடன் புதிய மாடல் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இவ்விரண்டு கையடக்க கைப்பேசிகளும் ஒயர்லெஸ் எஃப்எம், 1.8 இன்ச் டிஸ்ப்ளே, பாலிகார்பொனேஸ் நானோ பில்ட்டுடன், ஐபி52 தண்ணீரில் பாதுகாக்கும் வசதியுடன் வந்துள்ளது.

நோக்கியா 105 மாடல் கைப்பேசி விலை ரூ.1,299 ஆகவும், நோக்கியா 106 மாடல் கைப்பேசி ரூ.2,199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைக்கு இவ்விரண்டு மாடல் கைப்பேசிகளும் நோக்கியா இந்தியா இணையதளம் வாயிலாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் சிறப்பம்சமாக, இணைய வசதி இல்லாமல் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) முறையைப் பயன்படுத்தி உடனடி பணம் செலுத்தும் வகையில், கைப்பேசியிலேயே இன்பில்ட்டாக 'UPI 123PAY' இணைக்கப்பட்டு, எங்கிருக்கும் பயனாளர்கள் பணத்தை பெற, அனுப்ப வழிவகை செய்துள்ளது.

நோக்கியா 106 கைப்பேசியில் எம்பி3 பிளேயர் மற்றும் ப்ளூடூத் வி5 இணைப்பும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT