தமிழ்நாடு

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன்: ப. சிதம்பரம் 

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

DIN

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி ( மே 21) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ரூ.2000 நோட்டை அறிமுக நிலையிலேயே மக்கள் புறக்கணித்தார்கள். யார் கையில் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் உள்ளது என்றால் பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் தான். இப்போதாவது திருத்திக் கொண்டார்கள் மகிழ்ச்சி. 

விரைவில் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில கொண்டு வந்தால் நான் வியப்படையமாட்டேன் என்றார்.

 அவருடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT