தமிழ்நாடு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கரோனா பாதிப்பே இல்லை!

DIN

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கரோனா பாதிப்பே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது. தொற்று உள்ள மாவட்டங்களிலும் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக உயா்ந்து வந்த கரோனா பாதிப்பு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 13 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், சென்னையில் மூவருக்கும், கோவையில் இருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

தற்போது சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 17 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 15 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் தலா 9 பேரும் உள்ளனா்.

அதேவேளையில், அரியலூா், தருமபுரி, கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருப்பத்தூா், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்கள் கரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT