தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

DIN

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-இல் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் பணியமா்த்தப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியா்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஆனால், அவா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தக்கூட தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது. பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT