தமிழ்நாடு

கடைகளில் இனி செல்போன் எண் வழங்க கட்டாயம் இல்லை!

சில்லறை வர்த்தகக் கடைகளில் பொருள்கள் வாங்கிகொண்டு பணம் கட்டும்போது, வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்ணைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது 

DIN

சில்லறை வர்த்தகக் கடைகளில் பொருள்கள் வாங்கிகொண்டு பணம் கட்டும்போது, வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்ணைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை பிறரிடம் பகிர்வதில் தயக்கம் உள்ளதாகவும், இதனால் பல சைபர் குற்றங்கள் நடைபெறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட செல்போன் எண்ணை கேட்டு விற்பனையாளர்கள் வற்புறுத்துவதாகவும், இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயமற்ற  செயலாக இருப்பதாகவும், மேலும் விற்பனையாளர்கள் செல்போன் எண்ணை சேகரிப்பதில் எந்த தேவையும் இல்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வாடிக்கையாளர்கள் நலன் கருதி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண சில்லறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமங்களான சிஐஐ மற்றும் எஃப்ஐசிசிஐ ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனையாளரிடம் பில் போடுவதற்கு தங்கள் செல்போன் எண்ணை வழங்குவது இந்தியாவில் கட்டாயமில்லை.

இருப்பினும், சில்லறை விற்பனையாளர்கள் செல்போன் எண்ணைக் கேட்டு வற்புறுத்துவதால் வாடிக்கையாளர்கள் தயக்க நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வா் உத்தரவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீஸாா், உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நாடு முழுவதும் பாஜகவின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்வேன்: மம்தா பானா்ஜி

கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்களை வரவேற்கும் முத்தூட் ஃபைனான்ஸ்

தில்லி காற்று மாசு போராட்டத்தில் மாவோயிஸ்ட் முழக்கங்கள்: வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 197 சோ்ப்பு

SCROLL FOR NEXT