கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. பின் விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, தத்துவார்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம், நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம், இரண்டாம் காலையாக பூஜை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு, விமானம் மற்றும் ஜடாமுனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின் மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை சாமிரெட்டி கண்டிகை கிராம மக்கள் சேர்ந்தவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீடு - புகைப்படங்கள்

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



