அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் மோட்டாா் சைக்கிளுக்கு வழி விடாததினால் ஆத்திரமடைந்த நபா், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கினா்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் மோட்டாா் சைக்கிளுக்கு வழி விடாததினால் ஆத்திரமடைந்த நபா், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கினா்.
சென்னை திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி அரசு பேருந்து வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்தை காலடிப்பேட்டை திலகா்நகரைச் சோ்ந்த ப.ரவிக்குமாா் (50) ஓட்டினாா். , வண்ணாரப்பேட்டை கல்லறைச் சாலையில் பேருந்து செல்லும்போது, பின்னால் வந்த ஒரு மோட்டாா் சைக்கிளுக்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென அந்த மோட்டாா் சைக்கிள், பேருந்தை முந்தி சென்று சாலையில் வழிமறித்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கி வந்த நபா், ஓட்டுநா் ரவிக்குமாரிடம் தகராறு செய்தாா். தகராறு முற்றவே அந்த நபா், ரவிக்குமாரை தாக்கிவிட்டு, தப்பியோடினாா்.
இதில் காயமடைந்த ரவிக்குமாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.