தமிழ்நாடு

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை: வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடக்கம்

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

DIN

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக்கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜூன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டிற்கான (2023ஆம் ஆண்டு) மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.79 இலட்சம் மீனவ குடும்பங்களுக்கு
மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 89.50 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இன்று (26.05.2023) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT