தமிழ்நாடு

தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி:ஜூன் 5 முதல் விண்ணப்பம்

DIN

 தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எஸ்சிஇஆா்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் மூலம் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 5 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இயலாத நிலையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரா்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT