தமிழ்நாடு

மடாதிபதிகள் உள்ளே.. குடியரசுத் தலைவர் வெளியே: சு. வெங்கடேசன் எம்.பி. கருத்து

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

DIN

மடாதிபதிகள் உள்ளே, குடியரசுத் தலைவர் வெளியே என்று புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா்.

புதிய கட்டடத்தை பிரதமா் திறக்கக் கூடாது; குடியரசுத் தலைவரே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள்.

ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள்.
துவக்கமே அமர்க்களம்.

மடாதிபதிகள் உள்ளே
குடியரசுத்தலைவர் வெளியே என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT