தமிழ்நாடு

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் இபிஎஸ்: அமைச்சர் சக்கரபாணி கண்டனம்

DIN


சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக்டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருப்பு உள்ளது. இதிலிருந்து தான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தவுடனே தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதல்வர் அவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT