சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை: போலீசார் விசாரணை
சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அரிசிபாளையம் ஔவை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரொட்டி என்கிற லோகேஷ் ரௌடி போல் செயல்பட்டு வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் முன்விரதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் அம்மாபேட்டைக்கு குடியேறினார். இதையடுத்து நேற்று இரவு அரிசிபாளையம் பகுதிக்கு வந்த அவருக்கும் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லோகேஷ் கத்தியால் ரவியை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரவியை அந்த பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதை அறிந்த ரவியின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அதில் சிலர் லோகேஷை செங்கல் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் அவர் கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் தாங்காமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்தவர்கள் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி!
இது குறித்து தகவல் அறிந்த சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று லோகேஷ் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.