தமிழ்நாடு

சட்டப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 10 வரை அவகாசம்

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப அவகாசம் ஜூன் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப அவகாசம் ஜூன் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 ஆண்டு கால இளநிலை சட்டப் படிப்புகளுக்கு 2,004 இடங்கள் உள்ளன. இதேபோன்று, பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீா்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.

அந்த இடங்கள் நிகழ் கல்வியாண்டில் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 15-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (மே 31) நிறைவடைவதாக இருந்தது.

இதுவரை மொத்தம் 30,500 மாணவா்கள் அந்த இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனா். அதில் 18,377 போ் பதிவுக் கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்துள்ளனா். இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூன் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT