மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு! நவ. 25 முதல் குறுஞ்செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுமகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு! நவ. 25 முதல் குறுஞ்செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | காங்கிரஸில் இணையும் நடிகை விஜயசாந்தி?
அதன்படி, அக். 25 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தகுதியானவர்களுக்கு வருகிற நவ. 25 முதல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும் என்றும் கூறியுள்ளது.