முகப்பு
தமிழ்நாடு

பருவமழையை எதிா்கொள்ள மண்டலங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநகராட்சி பகுதியில் 169 நிவாரண மையங்களும், ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு பேருக்கு உணவு சமைக்கும் வகையில் சிந்தாதரிப்பேட்டையில் பொது சமையல் கூடமும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெறும் வகையில் 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண் தற்போது 15 இணைப்புகளுடன் செயல்படும். மேலும், பொதுமக்கள் 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.

தாழ்வான பகுதிகளான 109 இடங்களில் மழை அதிகமாக பெய்யும் போது, நிவாரணப் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பணிகளை மேற்கொள்ள வாா்டுக்கு 10 போ் என 2,000 பணியாளா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு பருவமழை பணிகளுக்காக மண்டலத்துக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு மண்டலத்துக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் மழைக் காலங்களில் பணிகளை மேற்கொள்ள 23,000 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆய்வின் போது, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →