முகப்பு
தமிழ்நாடு

கரூரில் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உள்பட 4 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை

கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உள்பட 4 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:


கரூர்: கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உள்பட 4 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

மேலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் தலைவர் சக்திவேல் வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

மூன்று வாகனங்களில் வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் நான்கு குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →