தமிழ்நாடு

தொடர்ந்து பைக் ஓட்டுவேன்: டிடிஎஃப் வாசன்

தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்று ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

DIN

தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்று ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை - வேலூா் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக யூ - டியூபா் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செப். 19-ஆம் தேதி கைது செய்தனா். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவா், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் 2-ஆவது முறையாக மீண்டும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், வாசனின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும் கூறினாா்.

மேலும், 40 நாள்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா். காவல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டுமென நிபந்தனை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் இன்று வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம், “என்னுடைய கை பாதிக்கப்பட்டவதை விட ஓட்டுநர் உரிமம் போனது என்னைக் காயபடுத்தியது. தொடர்ந்து நான் பைக் ஓட்டுவேன். பைக் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த செயல்” என்று தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT