கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்

குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

DIN

குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகா் காலனியில் பிரசார பொதுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவா் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்தும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்தும் பேசிய பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட சமூகத்தினரையும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின்கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சீமான் இன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இவ்வழக்கில் இன்று சீமான் நேரில் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

2-வது டி20: ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT