தமிழ்நாடு

தொழில்நுட்பக் கோளாறு: நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் 

DIN

விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, நீல வழித்தடத்தில் விக்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.


  நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ். நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
 விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
 பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT