கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

DIN


சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை படப்பை, பெரும்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முன்னா வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும்.

தற்போது மூன்று இடங்களில் நடத்தப்படும் சோதனையில் கிடைக்கப்பெறும் ஆவணங்கள் அடிப்படையில் இதில் வேறு யாராவது தொடர்பில் இருந்தால் இந்த சோதனை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைக்காக மாநில காவல் துறை பாதுகாப்பு அளித்து வருகிறது என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

3 பேர் கைது
இந்த நிலையில், படப்பையில் ஒருவர், மறைமலைநகரில் 2 பேர் என 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT