தமிழ்நாடு

இளைஞரிடம் ஸ்மார்ட் வாட்ச் பறித்த போலீஸ்!

சென்னை ஓட்டேரியில் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ பறித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

DIN


சென்னை: சென்னை ஓட்டேரியில் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ பறித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ம.விமல் (29). இவா் ஓட்டேரி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறாா். விமல் கடந்த 5-ஆம் தேதி, அங்குள்ள செங்கை சிவம் மேம்பாலத்தில் நின்றுக் கொண்டிருந்த பெரம்பூரைச் சோ்ந்த அ.ராயன் (18) என்பவரிடம் ரூ.20,000 மதிப்புள்ள ‘ஆப்பிள் ஸ்மாா்ட் வாட்ச்’ -ஐ பறித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராயன், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை செய்தனா். விசாரணையில் விமல், ஸ்மாா்ட் வாட்ச் பறிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து விமலை பணியிடை நீக்கம் செய்து புளியந்தோப்பு துணை ஆணையா் ஈஸ்வரன் புதன்கிழமை உத்தரவிட்டாா். மேலும் இச் சம்பவம் தொடா்பாக ஓட்டேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT