தமிழ்நாடு

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் கோபுரத்தில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலையில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN


சென்னை:  மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலையில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் கலசத்தை சுற்றி கீற்று ஓலைகள் சுற்றப்பட்டு கோபுரம் தெரியாதவாறு மறைக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | மனிதம் எங்கே போனது?

இந்த நிலையில், தீபாவளியையொட்டி அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதில், ஒரு ராக்கெட் பட்டாசு கோயிலின் கோபுரத்தை சுற்றப்பட்டிருந்த கீற்று ஓலைகள் மீது விழுந்ததால் தீப்பற்றியது. 

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT