முல்லைப்பெரியாறு அணை 
தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் நாளை(நவ. 15) மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் நாளை(புதன்கிழமை) ஆய்வு நடத்துகின்றனர்.

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் நாளை(புதன்கிழமை) ஆய்வு நடத்துகின்றனர்.

பருவமழைக் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மற்றும் அணையின் உறுதித்தன்மை, அணையில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் ஆகியவை பற்றி ஆய்வு நடத்த மத்திய கண்காணிப்பு தலைமை மற்றும் துணைக் குழுவினர் ஆய்வு நடத்துவார்கள்.

அதன்படி நாளை(புதன்கிழமை) மத்திய நீர்வள ஆணையத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி கோட்ட பொறியாளர் டி.குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருள்ராஜ் ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர்.

ஆய்வில் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பாதை, நீர் கசியும் அளவு, மதகுகளின் இயக்கம், நிலநடுக்கக் கருவிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்குப்பின் குமுளி 1 ஆம் மைலில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கைகளை மத்திய தலைமைக் குழுவுக்கு அனுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT