மாநில கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சென்னையின் தற்போதைய மழை நிலவரம், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மழை அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.