தூத்துக்குடி: தமிழக கடற்கரை பகுதிகளிலும், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
தமிழகக் கடல் பகுதி, குமரி கடல் பகுதி, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால், நாட்டுப் படகு, விசைப் படகு மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அதன்படி, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதன்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.