தமிழ்நாடு

உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு 

DIN


சென்னை: நிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் உயத்தப்படாது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. இதையடுத்து 50 சதவிகித தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இதனிடையே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் ரூ.150-லிருந்துரூ.225-ஆக உயத்தியுள்ளார்கள். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். தேர்வுக்கட்டணம் தொடர்பாக அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்கள், தேர்வுக்கட்டுபாட்டாளர்களுடன் கலந்துப்பேசி ஒரே மாதிரியான தேர்வுக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க முடிவு எடுக்கப்படும்.

எனவே, நிகழ் பருவத் தேர்வில் தேர்வு கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பழைய தேர்வுக்கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

இந்த நிலையில், உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT