முகப்பு
தமிழ்நாடு

சென்னை, 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:23 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →