தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 11 ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிச.4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆக.12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அதன் பிறகான நீதிமன்றக் காவல் கடந்த அக். 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவா் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். தொடா்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவ. 22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜரானார்.

இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-ஆவது முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

SCROLL FOR NEXT