கோப்புப்படம் 
தமிழ்நாடு

காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு! 

நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளதாவது: 
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருள்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1000 கோடி அளவில் தயாராகி வருகின்றன. 

கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48 சதவிகிதம் என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த துறை விரிவடையும். 

இந்த துறை, ஊரகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தி வருவதாக டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகாயம் முகம் பார்க்கிறது... மோனாமி கோஷ்

அழகிய... ஐஸ்வர்யா சர்மா!

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT