தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 
தமிழ்நாடு

யாருடன் கூட்டணி? ஜி.கே.வாசன் விளக்கம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்ற பெரும் கேள்வி நிலவி வருகின்றது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசன், தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து அதிமுக - பாஜகவுக்கு நட்புக் கட்சியாக செயல்படுவதாகவும், ஜனவரி மாதம் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT