தமிழ்நாடு

நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு வாபஸ்!

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது.

DIN

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.

"நீதிமன்றம் விளையாட்டு மைதானமல்ல எனவும், நேரத்தை வீணடிக்க வேண்டாம்" எனவும் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார். 

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை நாளை(நவ.23) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT