கோப்புப் படம் 
தமிழ்நாடு

கனமழை பாதிப்பு எதிரொலி: கோத்தகிரி, குன்னூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை வரை மழை தொடா்ந்தது. இந்த மழையின் காரணமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழ்கோத்தகிரியில் நட்டக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை அருகே 2 ஆவது வளைவில் பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள்  சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

இதேபோன்று குன்னூா், பா்லியாறு பகுதியில் கனமழை பெய்ததில் உமரி காட்டேஜ், பழைய ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. உமரி காட்டேஜ் பகுதியில் கான்கிரீட் சாலை துண்டாகி சேதமடைந்தது.

மண் சரிவு ஏற்பட்ட குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை 6 மணி நேரத்திலும், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை 10 மணி நேரத்திலும் சீா்செய்யப்பட்டன.

இந்த நிலையில், கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவிட்டாா்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்கோத்தகிரியில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 241 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT