தமிழ்நாடு

குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷபூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷபூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு காங். கமிட்டி எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில், குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். 

இந்தப் பிரச்னையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடித்து வைத்துவிட்டார். 

ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்;

மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து,  அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.எஸ்டி பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT