கோப்புப்படம் 
தமிழ்நாடு

'நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?' - குஷ்பு பேட்டி

நான் தவறான அர்த்தத்தில் கூறாதபோது ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

DIN

நான் தவறான அர்த்தத்தில் கூறாதபோது ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார். 

சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, 'உங்களைப் போல சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது' என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இதையடுத்து அவர் தனது கருத்துக்கு ஒரு விளக்கமும் அளித்திருந்தார். அதில், 'சேரி' என்றால் பிரெஞ்சு மொழியில் 'அன்பு' என்று பொருள். நான் அதை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தேன்' என்று கூறினார். இதற்குமே கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ''எனது கருத்துக்கு திமுகவினர் எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமாக கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவுக்கு செய்தித் தொடர்பாளர் காங்கிரஸா?

நான் அந்த மாதிரி அர்த்தத்தில் பேசவில்லை எனும்போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

அரசுப் பதிவுகளிலேயே 'சேரி' என்ற வார்த்தை இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பெயர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

எந்த பகுதி மக்களும் நமக்கு சமமாக அமர்ந்து பேசுவதற்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. ஒரு பகுதி மக்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வதற்கு நான் விரும்பவில்லை. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் தகாத வார்த்தைகள் பயன்படுத்துவது இல்லை. யாரையும் குறை சொல்லி பேசுவதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT