அண்ணாமலை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கோவை மாவட்ட பாஜக நிர்வாகி பதவியில் இருந்து விடுவிப்பு: அண்ணாமலை

கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து பாலாஜி உத்தம ராமசாமியை விடுவித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். 

DIN

 
சென்னை: கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து பாலாஜி உத்தம ராமசாமியை விடுவித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். 

அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை(நவ.26) முதல் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். 

கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளராக பணியாற்றி வந்த ஜே.ரமேஷ்குமார் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT