முகப்பு
தமிழ்நாடு

276 புதிய கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சாா்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:13 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சாா்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சாா்பில் தமிழ்க் கலைக் கழகத்தின் 145-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்கக அலுவலகத்தில் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அலுவல்சாரா உறுப்பினா்களான புலவா் வெற்றியழகன், முனைவா் கு.பாலசுப்பிரமணியன், முனைவா் இரா.கு. ஆல்துரை, நா.சு.சிதம்பரம் மற்றும் அலுவல்சாா் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள 276 தமிழ்க் கலைச் சொற்களுக்கு வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து இந்தச் சொற்கள் சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.