முகப்பு
தமிழ்நாடு

இன்றுமுதல் கோவைக்கு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜன.30-ஆம் தேதி வரை வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:13 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜன.30-ஆம் தேதி வரை வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நவ.28 முதல் ஜன.30 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்: 06035) பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

Advertisement

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06036) அதே நாள்களில் கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.