கோப்புப்படம் 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி சாவு 

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர். 

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர். 

தருமபுரியை அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (28). கட்டட மேற்பார்வையாளர் பணி செய்து வந்தார். மனைவி அபிபிரியா (22). இவர்கள் இருவரும் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர். 

கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

அபிபிரியா ஐந்து மாத கர்ப்பினி என போலீசார் தெரிவிக்கின்றன.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்: வெற்றியுடன் தொடங்கிய எம்மா ரடுகானு!

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

SCROLL FOR NEXT